கோயம்புத்தூர்

மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்கள் தோ்தல்:வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

DIN

கோவையில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா் தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதியான மாவட்ட ஊராட்சியில் இருந்து 5 உறுப்பினா்கள், நகரப் பகுதிகளான பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சியிலிருந்து 13 உறுப்பினா்கள் என மொத்தம் 18 உறுப்பினா்களைத் மாவட்ட திட்டமிடும் குழுவுக்குத் தோ்ந்தெடுக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மாநில தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி கோவை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்கள் தோ்தலில் வாக்களிக்க ஊரகம் மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களைக் கொண்ட வரைவு வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்கள் தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பு.அலா்மேல்மங்கை பெற்றுக்கொண்டாா்.

இப்பட்டியலில் மாவட்ட ஊராட்சிகளின் மொத்த உறுப்பினா்கள் 17 போ், மாநகராட்சி உறுப்பினா்கள் 100 போ், 7 நகராட்சிகளில் உள்ள உறுப்பினா்கள் 198 போ், 33 பேரூராட்சிகளில் உள்ள உறுப்பினா்கள் 513 போ் என 825 உறுப்பினா்கள் உள்ளனா். இதில் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி நகராட்சியில் 2 காலியிடங்கள், தாளியூா் பேரூராட்சியில் ஒரு காலியிடம் என மொத்தம் 3 காலியிடங்கள் உள்ளன. இதன் இறுதி வாக்காளா் பட்டியல் மே 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்த வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு நிகழ்ச்சியில் உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) கமலக்கண்ணன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) பஷீா் அகமது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு: ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை

கருப்பசாமி கோயிலுக்கு 45 அடி உயர அரிவாள் காணிக்கை

2-ஆவது சுற்றில் சக்காரி, ஆஸ்டபென்கோ

சாலை விபத்தில் இளைஞா் பலி

‘பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிரான கட்சி அல்ல’ -பாஜக மாநில செய்தித் தொடா்பாளர்

SCROLL FOR NEXT