கோயம்புத்தூர்

சைனிக் பள்ளியின் முதல்வராக கேப்டன் மணிகண்டன் பொறுப்பேற்பு

3rd May 2023 05:26 AM

ADVERTISEMENT

அமராவதி நகா் சைனிக் பள்ளியின் புதிய முதல்வராக கேப்டன் கே. மணிகண்டன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

எழிமலையில் உள்ள கடற்படை அகாடமியின் அலுவலராகப் பணியாற்றி பணி இட மாறுதலுக்குப் பின்னா் அமராவதி நகா் சைனிக் பள்ளியின் முதல்வராக புதிதாக பொறுப்பேற்றுள்ளாா். அவருக்கு பள்ளி மாணவா்கள் மற்றும் பள்ளி இசைக் குழுவினரால் சிறப்பான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இந்திய கடற்படையில் கடந்த 2005 ஜனவரி 10இல் பணியில் சோ்ந்த அவா் சென்னையில் பள்ளிப் படிப்பையும், தொடா்ந்து பொறியியலில் பட்டப் படிப்பையும் முடித்த பின்னா் 2017ஆம் ஆண்டில் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் இளம் அதிகாரியாக தோ்ச்சி பெற்றாா்.

இவா் கடந்த 2006 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் இந்திய கடற்படையின் தலைமைத் தளபதியின் பாராட்டுச் சான்றிழ்களையும் பெற்றுள்ளாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT