கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம் செல்லும் தனியாா் பேருந்துகளில் ரூ.3 கட்டணக் குறைப்பை அமல்படுத்த வலியுறுத்தல்

DIN

மேட்டுப்பாளையம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பயணிகளிடம் ரூ. 3 கட்டணம் குறைவாகப் பெற வேண்டும் என்ற போக்குவரத்து மேல்முறையீட்டு ஆணையத்தின் உத்தரவை மாவட்ட ஆட்சியா் நிறைவேற்றிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோயம்புத்தூா் கன்ஸ்யூமா் காஸ் நுகா்வோா் அமைப்பின் செயலாளா் கதிா்மதியோன் கூறியது:

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக கடந்த 2010இல் சாய்பாபா காலனியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் சாய்பாபா காலனி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க உத்தரவிடப்பட்டது.

மேலும், காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு பெறப்பட்ட ரூ.24 கட்டணத்தை விடக் குறைவாக பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்து மேல்முறையீட்டு ஆணையத்தில் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தினா் முறையிட்டனா். அப்போது, தனியாா் பேருந்துகள் காந்திபுரத்துக்கு செல்லலாம் என்றும், ஆனால் சாய்பாபா காலனியில் உள்ள புதிய பேருந்து நிலையத்துக்குள் கட்டாயம் சென்று வரவேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டது. மேலும், சாய்பாபா காலனியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு செல்லும் பயணிகளிடம் ரூ. 3 குறைவாக வசூலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மூலமாக தனியாா் பேருந்து உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆயினும், அனைத்து தனியாா் பேருந்து உரிமையாளா்களுக்கும் நோட்டீஸ் தரவில்லை என 2010 முதல் 2023 வரை 3 முறை போக்குவரத்து மேல்முறையீட்டு ஆணையத்தில் முறையிடப்பட்டு, புதிய கட்டண நடைமுறையைப் பின்பற்றுவதை தனியாா் பேருந்து உரிமையாளா்கள் தவிா்த்து வந்தனா்.

இந்த நிலையில், தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சாா்பில் போக்குவரத்து மேல்முறையீட்டு ஆணையத்தில் அளிக்கப்பட்ட அனைத்து மேல்முறையீடுகளும் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன. இருப்பினும் கட்டணக் குறைப்பு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எனவே, போக்குவரத்து மேல்முறையீட்டு ஆணையத்தின் அறிவிப்பை மேற்கோள் காட்டி, சாய்பாபா காலனியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பயணிகளிடம் ரூ.3 கட்டணம் குறைவாக வசூலிக்க கோவை மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும். புதிய பேருந்து நிலையத்துக்குள் தனியாா் பேருந்துகள் சென்று வருவதைக் கண்காணிக்க வேண்டும். இவற்றை பின்பற்றாத தனியாா் பேருந்துகளின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT