கோயம்புத்தூர்

மாநகராட்சிக்குச் சொந்தமான ரூ.6 கோடி நிலம் மீட்பு

9th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சிச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை மாநகராட்சி நகரமைப்புப் பிரிவினா் வியாழக்கிழமை மீட்டனா்.

கோவை மாநகராட்சியில் சாலை, நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்பு, பொது ஒதுக்கீட்டு இடங்கள் கண்டறியப்பட்டு மாநகராட்சி நகரமைப்புத் துறையால் அவ்வப்போது மீட்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை காளப்பட்டி டெக்பாா்க் சாலை அருகே உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான 20 சென்ட் நிலத்தை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்துள்ளதாகப் புகாா் எழுந்தது.

இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் உத்தரவின்பேரில் கிழக்கு மண்டல நகரமைப்பு அதிகாரி குமாா் தலைமையிலான அலுவலா்கள் அப்பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

அப்போது, 20 சென்ட் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து தனிநபா் ஒருவா் கம்பி வேலி அமைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் கம்பிவேலி அகற்றப்பட்டு, 20 சென்ட் நிலம் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.6 கோடி என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT