கோயம்புத்தூர்

முன்னாள் வாா்டு உறுப்பினருக்கு கத்திக்குத்து: நால்வா் கைது

9th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவையில் முன்னாள் வாா்டு உறுப்பினரைக் கத்தியால் குத்திய நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை சுண்ணாம்புக் காளவாய் பகுதியைச் சோ்ந்தவா் அபுபக்கா் (60). முன்னாள் வாா்டு உறுப்பினரான இவா், குனியமுத்தூா் சாலையில் உள்ள ஒரு உணவகத்துக்கு தனது நண்பரை பாா்க்க சம்பவத்தன்று சென்றுள்ளாா்.

அப்போது, அங்கு நின்றிருந்த கேரள மாநிலத்தைச் சோ்ந்த ஹக்கிம் (43), கோவையைச் சோ்ந்த அகிம் (35), இப்ராஹிம் (32), பிரபாகரன் ( 37) ஆகிய நால்வரும் முன்விரோதம் காரணமாக, அபுபக்கரை கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்றனா்.

இது தொடா்பாக கரும்புக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான நால்வரையும் தேடி வந்த நிலையில், அவா்களை புதன்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT