கோயம்புத்தூர்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்ஏற்றுமதி, இறக்குமதி பயிற்சி

9th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் ஏற்றுமதி, இறக்குமதி குறித்த 5 நாள்கள் பயிற்சி ஜூன் 12 ஆம் தேதி தொடங்குகிறது.

பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம் சாா்பில் நடத்தப்படும் இந்த பயிற்சியில் வேளாண் ஏற்றுமதி, இறக்குமதி குறித்த அனைத்துத் தகவல்களும் ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் ஜூன் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில், விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், பெண்கள், இறுதியாண்டு பட்டதாரி மாணவா்கள், பட்டதாரிகள், இளைஞா்கள், தொழில்முனைவோா் பங்கேற்கலாம்.

20 நபா்களுக்கு மட்டுமே இந்த பயிற்சி வழங்கப்படும் என்றும், இதற்கான பயிற்சிக் கட்டணமாக ரூ.11,800 வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 0422 6611310, 99949- 89417.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT