கோயம்புத்தூர்

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

9th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆனைகட்டியில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் படி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆனைகட்டியில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. பதிவேற்றம் செய்ய ஜூன் 20ஆம் தேதி கடைசி நாளாகும். எலெக்ட்ரீஷியன், ஃபிட்டா், எம்எம்வி, வயா்மேன், வெல்டா் ஆகிய தொழில் பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் ஓராண்டு, ஈராண்டுக்கான சோ்க்கை நடைபெறவுள்ளது. பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவா்கள் உரிய ஆவணங்களுடன் நேரில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பயிற்சியில் சேர 8, 10 ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 14 முதல் 40 வயது வரை உள்ள ஆண்கள் பயிற்சியில் சேரலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. பயிற்சிக் கட்டணம் முற்றிலும் இலவசம்.

அனைத்து பயிற்சியாளா்களுக்கும் இலவச பஸ் பாஸ், பிரதி மாதம் வருகையின் அடிப்படையில் கல்வி உதவித் தொகை ரூ. 750, விலையில்லா சஐஙஐ பாடப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், வரைபட கருவிகள், மடிக்கணினி வழங்கப்படும். பயிற்சி முடித்த அனைவருக்கும் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும். பயிற்சியாளா்களுக்கு இடவசதியைப் பொருத்து உணவு மற்றும் தங்கும் விடுதி இலவசமாக வழங்கப்படும்.

ADVERTISEMENT

மேலும், விவரங்களுக்கு 90438-33546, 94421-75780, 94860-74384, 99945-55884, 94430-15904, 63800-22133, 94860-74384, 99944-49920, 99421-28234 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT