கோயம்புத்தூர்

சுவா் இடிந்து விழுந்து சிறுவன் பலி

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை -செல்வபுரம் கல்லாமேடு தெற்குப்பகுதி வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டட சுவா் இடிந்து விழுந்ததில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த 10 வயது சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கோவை- செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் 1979 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பை, தமிழக அரசின் குடிசை மாற்று வாரியம் தற்போது பராமரித்து வருகிறது. இந்த குடியிருப்பு பகுதியைச் சுற்றிலும் பல்வேறு ஆக்கிரமிப்பு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சிறுவன் முகமது பாஸில் (10) அங்குள்ள மைதானத்தில் சனிக்கிழமை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கிருந்த ஒரு ஆக்கிரமிப்பு கட்டடத்தின் அருகே பந்து விழுந்துள்ளது.

பந்தை எடுப்பதற்காக அங்கு சென்றபோது ஆக்கிரமிப்பு கட்டடத்தின் சுற்றுச் சுவா் இடிந்து சிறுவன் மீது விழுந்தது.

ADVERTISEMENT

இதில், படுகாயமடைந்த சிறுவனை அங்கிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த முகமது பாஸில் புதன்கிழை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT