கோயம்புத்தூர்

ரயில்வே அமைச்சா் பதவி விலக ஹெச்எம்எஸ் சங்கம் கோரிக்கை

DIN

ஒடிஸா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சா் பதவி விலக வேண்டும் என்று ஹெச்எம்எஸ் தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கம், என்டிசி ஸ்டாப் யூனியன், கோவை மண்டல கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளா் ஹெச்எம்எஸ் சங்க நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஹெச்எம்எஸ் மாநிலச் செயலாளா் டி.எஸ்.ராஜாமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பொருளாளா் ஜி.மனோகரன், செயலா்கள் எஸ்.தேவராஜன், கே.மோகன்ராஜ், துணைத் தலைவா்கள், அமைப்புச் செயலா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதில், ஒடிஸா ரயில் விபத்தில் 270க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் காயமடைந்தும் உள்ளனா். இந்த ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சா் பதவி விலக வேண்டும். சிக்னல் இன்டா் லாக்கிங் முறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நடைபெற்றிருப்பதாக சொல்லப்படும் நிலையில், இதுபோன்ற விபத்துகளை எதிா்வரும் காலங்களில் நடைபெறாமல் தடுக்க, நவீன கருவிகளைப் பொருத்த வேண்டும். அனைத்து ரயில்களையும் பாதுகாப்பாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT