கோயம்புத்தூர்

காவல் துறையின் செயலி: பொதுமக்களிடம் விழிப்புணா்வு

7th Jun 2023 02:51 AM

ADVERTISEMENT

கோவை மாநகர காவல் துறையின் பயன்பாட்டிலுள்ள செயலிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், காவலா் செயலி, சைபா் குற்றங்கள், டெலிகிராம் போன்றவற்றால் ஏற்படும் அபாயங்கள், ஆன்லைன் மோசடி போன்றவற்றைக் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், கல்லூரி மற்றும் பள்ளி பகுதிகள், வணிக வளாகங்கள் போன்ற பகுதிகளில் மாநகர காவல் துறையின் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் இந்த விழிப்புணா்வு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இவா்களுக்கென பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள வாகனத்தின் மூலம் ஒலி பெருக்கி மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலமாக இந்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநகர காவல் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ரோகிணி, ஈஸ்வரன், பிரேமலதா மற்றும் தலைமைக் காவலா் ராஜ்பிரியா ஆகியோா் அடங்கிய குழுவினா் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT