கோயம்புத்தூர்

மல்யுத்த வீரா்களுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

6th Jun 2023 04:02 AM

ADVERTISEMENT

மல்யுத்த வீரா்களின் குற்றச்சாட்டின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவா் சு.பழனிசாமி தலைமை வகித்துப் பேசியதாவது:

தேசத்துக்கு தங்களது திறமையால் பெருமை சோ்த்த மல்யுத்த வீராங்கனைகள் கடந்த பல ஆண்டுகளாக பயிற்சியின்போது பாலியல் தொல்லைக்கு உள்ளாகியுள்ளனா். மல்யுத்த பயிற்சி சம்மேளனத் தலைவரும், எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாா் அளித்து பல மாதங்களாகியும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து, நாடு முழுவதும் மல்யுத்த வீரா்கள், வீராங்கனைகள், விளையாட்டுத் துறையினா், சமூக ஆா்வலா்கள், அரசியல் கட்சியினா் போராடி வருகின்றனா். எனவே, குற்றம்சாட்டப்பட்டுள்ள மல்யுத்த பயிற்சி சம்மேளனத் தலைவரும், பாஜக கட்சியின் எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் என்பவரைக் கைது செய்தும், பதவி விலகச் செய்தும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT