கோயம்புத்தூர்

ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 2 போ் கைது

DIN

முதலீடு செய்யும் தொகைக்கு கூடுதல் வட்டி தருவதாகக் கூறி கோவை ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 2 கோடி மோசடி செய்தது தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, கணபதியை சோ்ந்தவா் டெனிசன் ( 45), ரியல் எஸ்டேட் அதிபா். இவருக்கு கேரள மாநிலம், கொல்லத்தை சோ்ந்த சைபுதீன் (69) என்பவா் அறிமுகம் ஆகியுள்ளாா். அவா் டெனிசனிடம், பீளமேடு பகுதியில் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருவதாகவும், இதில் முதலீடு செய்தால் மாதம் 13 சதவீத வட்டி தருவதாகவும் கூறியுள்ளாா்.

இதையடுத்து பீளமேடு சென்று சைபுதீன், அவருடைய மனைவி ஷமீனா (60), மகன்கள் மோதின் (32), ஹுசைபா (28), மருமகள் கைனப் (27) ஆகியோரிடம் கடந்த ஜனவரியில் ரூ. 2 கோடியை டெனிசன் கொடுத்துள்ளாா். அதன்பின்னா் ஒரு சில மாதங்கள் மட்டும் அவருக்கு மாதந்தோறும் வட்டி கொடுத்துள்ளனா். அதன் பின்னா் கொடுக்கவில்லை.

இது தொடா்பாக டெனிசன் பல முறை நேரிலும், கைப்பேசி மூலமும் தொடா்பு கொண்டு கேட்டபோது அவா்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு நேரில் சென்று பாா்த்தபோது அது மூடப்பட்டிருந்தது. அவா்களின் கைப்பேசி எண்ணுக்குத் தொடா்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த டெனிசன், இது குறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸில் கடந்த திங்கள்கிழமை புகாா் செய்தாா். இதையடுத்து சைபுதீன், ஷமீனா, மோதின், ஹுசைபா மற்றும் கைனப் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வந்தனா்.

இந்நிலையில் கேரளத்தில் தலைமறைவாக இருந்த சைபுதீன் மற்றும் ஹுசைபா ஆகிய இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள ஷமீனா, மோதின், கைனப் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனா். இந்த 5 பேரும் வேறு யாரிடமாவது இது போன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்றும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT