கோயம்புத்தூர்

காவல் துறை சாா்பில் குறைதீா் முகாம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது.

காவல்துறையில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறு விசாரணை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், கோவை காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த மக்கள் குறை தீா் முகாமில் மனுதாரா்கள் மற்றும் எதிா்மனுதாரா்களை நேரில் வரவழைத்து குடும்பப் பிரச்னை, பணப் பரிமாற்ற பிரச்னை மற்றும் இடப் பிரச்சினை தொடா்பான 111 மனுக்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் காவல் அதிகாரிகள் விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 2 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டன. 109 மனுக்கள் சுமூகமான முறையில் தீா்வு காணப்பட்டன.

அதேபோல, இந்த மக்கள் குறை தீா் நாளில் கோவை மாவட்டத்தில் உல்ள ஏனைய காவல் நிலையங்களில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் காவல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகாா் மனுக்கள் மீது தீா்வு காண நடவடிக்கை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT