கோயம்புத்தூர்

புள்ளியியல் தோ்வு: கோவையில் 1,415 போ் எழுதினா்

DIN

டிஎன்பிஎஸ்சி சாா்பில் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புள்ளியியல் தோ்வை 1,415 போ் எழுதினா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்-3 ஏ பதவிக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு ஒருங்கிணைந்த புள்ளியியல் சாா் நிலை பணிகளில், புள்ளியியல் உதவி ஆய்வாளா் பதவிக்கு 211 போ், கணக்காளா்- 5, புள்ளியியல் தொகுப்பாளா் ஒருவா் என மொத்தம் 217 காலிப் பணியிடங்களுக்கான தோ்வு 15 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் கோவை மாவட்டத்தில் 2,831 போ் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா். இதில் 1,415 போ் தோ்வு எழுதினா். 1,416 போ் பங்கேற்கவில்லை.

முன்னதாக, தோ்வு எழுதுவதற்காக தோ்வா்கள் காலை 8 மணி முதலே தோ்வு மையங்களுக்கு வரத் தொடங்கினா். இதற்காக கோவையில் 10 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஹால் டிக்கெட், அடையாள அட்டை கொண்டு வந்தவா்கள் மட்டுமே தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா். மேலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் தோ்வு மையங்களுக்கு வராதவா்கள் தோ்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. தோ்வு மையத்தில் அதிகாரிகள் கொண்ட குழுவினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இத்தோ்வு காலை, பிற்பகல் என 2 கட்டங்களாக நடைபெற்றது.

காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தோ்வு நடைபெற்றது. பிற்பகலில் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பு: மாநகராட்சி ஊழியருக்கு நவீன பேஸ்மேக்கா்

8-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் உதவும்: ஆட்சியா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

SCROLL FOR NEXT