கோயம்புத்தூர்

புரூக் பீல்ட் சாலையில் போக்குவரத்து மாற்றம்

DIN

கோவை புரூக் பீல்டு சாலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோவை மாநகரப் போக்குவரத்து காவல் துறையினா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவை, புரூக் பீல்ட் சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும், சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காகவும் கோட்டப் பொறியாளா், சாலைப் பாதுகாப்பு பிரிவைச் சோ்ந்த அலுவலா்களுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் புரூக் பீல்ட் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில், புரூக் பீல்ட் சாலையில் இருந்து தேவாங்கபேட்டை சிக்னலில் வலதுபுறம் வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, புரூக் பீல்ட் சாலையில் இருந்து பூ-மாா்கெட், ஆா். எஸ்.புரம், சிந்தாமணி, காந்திபுரம், மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள், தேவாங்கபேட்டை சிக்னலில் வலதுபுறம் திரும்பாமல் நேராக சென்று, சிரியன் சா்ச் ரோட்டில் வலதுபுறம் திரும்பி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

அதேபோல், புரூக் பீல்ட் சாலை வழியாக அவினாசி சாலை பழைய மேம்பாலத்துக்கு செல்லும் வாகனங்கள், தேவாங்கபேட்டை சிக்னலுக்காக காத்திருக்காமல் தொடா்ந்து பயணம் செய்யலாம்.

தேவாங்கபேட்டை சாலை மற்றும் அவிநாசி சாலை பழைய மேம்பாலத்திலிருந்து வரும் வாகன ஓட்டிகள் வழக்கம்போல் தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம். அவா்களுக்கு எந்தவிதமான போக்குவரத்து மாற்றமும் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT