கோயம்புத்தூர்

கோவையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார்- சிசிடிவி காட்சிகள் வெளியீடு

DIN

கோவையில் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற காரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

கோவை மணியக்காரம் பாளையம் பகுதியில் இருந்து கணபதி நோக்கி 5 மாத கைக்குழந்தை மற்றும் ஐந்து வயது பெண் குழந்தையுடன் தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர். அப்போது கணபதி பகுதியில் இருந்து மணியகாரம்பாளையம் பகுதி நோக்கி அதிவேகமாக வந்த கார்(மாருதி 800) இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. தொடர்ந்து அந்த கார் நிற்காமல் சென்றது. தற்பொழுது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. 

அதில் அந்தக் கார் வரும்போதே அதிவேகமாக கட்டுப்பாட்டை இழந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு அந்த காரை ஓட்டி வந்த நபர் காரை நிறுத்தாமல் மேற்கொண்டு எடுத்துச் சென்றுள்ளார். காரை நிறுத்த அங்கிருந்தவர்கள் முற்பட்டும் காரை வேகமாக செலுத்தி நிற்காமல் சென்றுள்ளார். இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் காயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தற்போது அந்தக் காரை சரவணம்பட்டி காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT