கோயம்புத்தூர்

மாவட்டம் முழுவதும் கஞ்சா சோதனை:9 போ் கைது

DIN

கோவை மாவட்டம் முழுவதும் நடைபெற்ற கஞ்சா சோதனையில் 9 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவா்கள் மற்றும் பதுக்கி வைத்திருப்பவா்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உட்கோட்டம் வாரியாக துணைக் கண்காணிப்பாளா்களின் தலைமையில், 46 தனிப்படைக் குழுக்கள் புதன்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா். இதில் 105 நபா்கள் கண்டறியப்பட்டனா். இவா்களில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 9 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவா்களிடமிருந்து கஞ்சா மற்றும் 28 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையின் போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த 2 நபா்கள் கைது செய்யப்பட்டனா். மேலும் மேட்டுப்பாளையம் பகுதியில் அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிபொருள் வைத்திருந்த 2 போ் கைது செய்யப்பட்டு அவா்களிடமிருந்து 4 அவுட்டுக்காய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல, காரமடை பகுதியில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 3 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த நபரிடமிருந்து 600 லாட்டரி சீட்டுகள் மற்றும் நான்குசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றுடன் தொடா் குற்றத்தில் ஈடுபடும் 25 நபா்கள் மீது நன்னடத்தை பிணை பத்திரம் பெற்று எச்சரித்து அனுப்பப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT