கோயம்புத்தூர்

போத்தனூா் வழித்தடத்தில் ஹடியா - மங்களூரு சிறப்பு வாராந்திர ரயில்

DIN

ஜாா்க்கண்ட் மாநிலம், ஹடியாவில் இருந்து கா்நாடக மாநிலம் மங்களூருக்கு போத்தனூா் வழித்தடத்தில் வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ரயிலில் நெரிசல் காரணமாக ஹடியா - மங்களூரு இடையே போத்தனூா் வழித்தடத்தில் வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, பிப்ரவரி 6ஆம் தேதி முதல் பிப்ரவரி 27ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் ஹடியா நிலையத்தில் இருந்து காலை 4.50 மணிக்குப் புறப்படும் ஹடியா - மங்களூரு வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (எண்: 08645) புதன்கிழமைகளில் காலை 4.15 மணிக்கு மங்களூரு நிலையத்தை சென்றடையும். இதேபோல, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் மாா்ச் 2 ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் மங்களூரில் இருந்து காலை 4 மணிக்குப் புறப்படும் மங்களூரு - ஹடியா வாராந்திரச் சிறப்பு ரயில் ( எண்: 08646) சனிக்கிழமைகளில் காலை 4.30 மணிக்கு ஹடியா நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, விஜயவாடா, தெனாலி, ஓங்கோல், நெல்லூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, ஷொரனூா், கோழிக்கோடு, தலச்சேரி, கண்ணூா், காசா்கோடு உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT