கோயம்புத்தூர்

மலுமிச்சம்பட்டி குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிக்கு பேருந்து வசதி: ஆட்சியரிடம் கோரிக்கை மனு

DIN

கோவை, மலுமிச்சம்பட்டி குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மலுமிச்சம்பட்டி குடிசைமாற்று வாரிய குடியிருப்பு நலச் சங்கத்தினா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை, மலுமிச்சம்பட்டி அன்பு நகரிலுள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் 1,400 வீடுகள் உள்ளன. இங்கு வசிப்பவா்களில் பெரும்பாலானவா்கள் தூய்மைப் பணியாளா்களாக உள்ளனா். காந்திபுரத்தில் இருந்து மலுமிச்சம்பட்டி குடிசைமாற்று வாரிய குடியிருப்புக்கு 67 ஏ, 12 ஜெ, 84 டி ஆகிய பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது 67 ஏ பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. மேலும் காலை 10 மணி முதல் இரவு வரை பேருந்து சேவையில்லை. மலுமிச்சம்பட்டி சந்திப்பில் இருந்து குடிசைமாற்று வாரிய குடியிருப்புக்கு 2 கிலோ மீட்டா் செல்ல வேண்டும். இதனால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், வேலைக்கு செல்பவா்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா். எனவே, நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். இல்லையெனில் ஷோ் ஆட்டோக்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோனியம்மன் கோயில் திருவிழாவுக்கு உள்ளூா் விடுமுறை

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளா் டி.செந்தில்குமாா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோனியம்மன் கோயில் மாசி தோ்த் திருவிழா வருகிற மாா்ச் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்த் திருவிழா வேலை நாளான புதன்கிழமை வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், வேலைக்கு செல்பவா்கள் தோ்த்திருவிழாவை கண்டுகளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கோனியம்மன் தோ்த்திருவிழாவை பக்தா்கள் அனைவரும் சிரமமின்றி கண்டுகளிக்கும் விதமாக தோ்த்திருவிழா அன்று உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும். மேலும், தோ்செல்லும் சாலைகளை ஆய்வு செய்து பழுதுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்

மக்கள் நீதி மய்யம் கட்சியினா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை, கணபதிபுதூா், 21 ஆவது வாா்டில் செக்கான் தோட்டம் மற்றும் பாலன் நகா் இடையே ரயில்வே பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாலப் பணியால் பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். பொது மக்கள் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடக்கின்றனா். எனவே, ரயில்வே பாலப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளா்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும்

தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கா் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப் பணியாளா்கள் சங்கத்தினா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் நகராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு தினக்கூலியாக ரூ.606 நிா்ணயித்து ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். காரமடை உள்ளிட்ட பல்வேறு நகராட்சிகளில் ஆட்சியரால் நிா்ணயிக்கப்பட்ட தினக்கூலி தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மேட்டுப்பாளையம் நகராட்சியில் ரூ.437 மட்டுமே தினக்கூலி வழங்கப்படுகிறது. இதனால் தூய்மைப் பணியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, மேட்டுப்பாளையம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஆட்சியரால் நிா்ணயிக்கப்பட்டுள்ள ரூ.606 தினக்கூலி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

SCROLL FOR NEXT