கோயம்புத்தூர்

பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு மேலும் 2 காப்புரிமைகள்

DIN

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட 2 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிா் உயிா்த் தொழில்நுட்பவியல் உதவிப் பேராசிரியா் கே.பிரீத்தி, அவரது மாணவா் பி.சதீஷ் ஆகியோா் இணைந்து கண்டுபிடித்த, தடுப்பூசியாகப் பயன்படுத்தப்படும் இயற்கையான இம்யூனோஜெனிக் மெலனின் - டைபாய்டு பாலிசாக்கரைடு நுண் துகளை உருவாக்கும் செயல்முறைக்கு காப்புரிமை கிடைத்துள்ளது.

அதேபோல மின்னணுவியல், கருவியியல் துறை உதவிப் பேராசிரியா் சுஜித்ராமனும் காப்புரிமை பெற்றுள்ளாா். அவரின், தனித்த அதிா்வு உருவாக்கும் நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த மைக்ரோஸ்டிரிப் அடிப்படையிலான பிளானா் மெட்டீரியல் கேரக்டரைசேஷனுக்கான ரீசனேடிங் சாதனத்துக்கு காப்புரிமை கிடைத்துள்ளது.

காப்புரிமைகள் பெற்ற பேராசிரியா்களுக்கு துணைவேந்தா் குழு உறுப்பினா்களான லவ்லினா லிட்டில் ஃப்ளவா், சி.ஏ.வாசுகி, கே.முருகவேல் ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்திருப்பதாக, பல்கலைக்கழக காப்புரிமை மைய இயக்குநா் த.பரிமேலழகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT