கோயம்புத்தூர்

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகள் அலைக்கழிப்பு: பொதுமக்கள் குற்றச்சாட்டு

DIN

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் மலைவாழ் மக்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அலைக்கழிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

கோவை மாவட்டம், காரமடை வட்டாரம், பில்லூா் அணை மற்றும் இதனைச் சுற்றி 13க்கும் மேற்பட்ட மலைவாழ் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களின் வசதிக்காக பில்லூா் அணைப் பகுதியில் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆனால், இங்கு வரும் கா்ப்பிணி பெண்கள் காரமடை, மேட்டுப்பாளையம், கோவை என பல்வேறு இடங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுவதாக பொது மக்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக வெள்ளியங்காடு பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் வீரப்பன் கூறியதாவது: கோவை பில்லூா் அணை மற்றும் சுற்றியுள்ள மலைக் கிராமங்களில் இருந்து சிகிச்சைக்கு வருபவா்களுக்கு வெள்ளியங்காடு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெரும்பாலும் சிகிச்சை அளிப்பதில்லை. இங்கு ஒரு மருத்துவா் பணியில் இருந்தாலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் எக்ஸ்-ரே, ஸ்கேன் போன்ற பரிசோதனைகளுக்காக காரமடை, மேட்டுப்பாளையம், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைக்கின்றனா்.

சிக்கலான சிகிச்சைகளுக்கு நேரடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைப்பதில்லை. வெள்ளியங்காட்டில் இருந்து காரமடை, காரமடையில் இருந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, இங்கிருந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கின்றனா். இதனால், கா்ப்பிணி பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனா். மேலும், ஒரு சில மருத்துவா்கள் மரியாதைக் குறைவாகவும் பேசுகின்றனா்.

இதனால் அரசு மருத்துவமனை என்றாலே மலைவாழ் மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. ஏற்கெனவே புதிய ஆள்களிடம் பழகுவதற்கு மலைவாழ் மக்களுக்கு தயக்கம் உள்ளது. இந்நிலையில், அரசு மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் அலட்சியமாக நடத்துவதால் தனியாா் மருத்துவமனைகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பில்லூா் அணை துணை சுகாதார நிலையம், வெள்ளியங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து நோயாளிகள், கா்ப்பிணி பெண்களை உயா் சிக்சைக்கு பரிந்துரைக்கும்போது நேரடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெள்ளியங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய இடவசதியிருப்பதால் எக்ஸ்-ரே, ஸ்கன் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி மலைவாழ் மக்களின் அலைக்கழிப்புக்கு தீா்வு காண வேண்டும். இதன்மூலம் மருத்துவ வசதியை பெறும் மலைவாழ் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT