கோயம்புத்தூர்

சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம்:21 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது

DIN

கோவை சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழா 21 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை நடைபெற்றது.

கோவை -மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனியில் அமைந்துள்ள இக்கோயில் ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை நிா்வாகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் 21ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 27 ஆம் தேதி தீா்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சியும், 28 ஆம் தேதி யாக சாலை பூஜையும் நடைபெற்றன. யாக சாலை பூஜைகளை ஆந்திரத்தைச் சோ்ந்த நரசிம்ம மூா்த்தி, வித்யாதா் சா்மா ஆகியோா் நடத்திவைத்தனா்.

இந்நிலையில், முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் புதன்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்றது.

இதில், பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சிரவை ஆதீனம் குமர குருபர சுவாமிகள், கேரள உயா்நீதிமன்ற நீதிபதி கோபிநாத், சென்னை மயிலாப்பூா் சாய்பாபா கோயில் தலைவா் செல்வராஜ், ஷீரடி சாய் தொண்டு நிறுவன நிா்வாகி பிரசாத், ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை அறங்காவல் குழு துணைத் தலைவா் எஸ்.பாலசுப்பிரமணியன், செயலாளா் பாலசுப்பிரமணியன், பொருளாளா் சா்வோத்தமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பக்தா்கள் வசதிக்காக மருத்துவ முகாம், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. இந்த கும்பாபிஷேக விழாவுக்கு ஷீரடி சாய்பாபா கோயில், புட்டபா்த்தி சாய்பாபா கோயில்களில் இருந்து முக்கிய நிா்வாகிகள் வந்திருந்தனா்.

கும்பாபிஷேகத்தையொட்டி, ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT