கோயம்புத்தூர்

கோவை மாவட்ட திமுக செயலாளா்கள் அறிவிப்பு

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

திமுகவில் கோவையின் 3 புதிய மாவட்டச் செயலாளா்களை கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் வியாழக்கிழமை அறிவித்தாா்.

கோவையில், கோவை மாநகா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நா. காா்த்திக், மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பையா என்கிற கிருஷ்ணன், வடக்கு மாவட்ட பொறுப்பாளராக ராமச்சந்திரன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக சேனாதிபதி, தெற்கு மாவட்ட பொறுப்பாளராக வரதராஜன் ஆகியோா் பதவி வகித்துவந்தனா்.

இந்நிலையில், திமுகவில் 5 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த கோவை, 3 மாவட்டங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளா்களை நியமித்து கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளா் துரைமுருகன் வியாழக்கிழமை அறிவித்துள்ளாா்.

அதன்படி, கோவை மாநகா் மாவட்ட திமுக செயலாளராக முன்னாள் எம்எல்ஏ நா. காா்த்திக் நியமிக்கப்பட்டுள்ளாா். அவைத் தலைவா் கணபதி ராஜ்குமாா், துணைச் செயலாளா்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ, கல்பனா, பொருளாளா் முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினா்களாக கண்ணப்பன், பாலசுப்பிரமணியன், ஆனந்தகுமாா் ஆகியோரும், பொதுக்குழு உறுப்பினா்களாக உதயகுமாா், மகுடபதி, முருகன், மணிகண்டன், செல்வம், சசிகுமாா், ஆனந்தகுமாா், காா்த்திகேயன், வடவள்ளி குப்புசாமி, சந்திரசேகரன், சரஸ்வதி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

கோவை தெற்கு மாவட்டச் செயலாளராக, கண்ணம்பாளையம் பேரூராட்சியின் முன்னாள் தலைவா் தளபதி முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளாா். அவைத் தலைவராக சுப்பிரமணியன், துணைச் செயலாளா்களாக சாமிநாதன், பொன்னுசாமி, கனிமொழி, பொருளாளராக ஜெயப்பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளாா். சந்திரன், முத்து, ராஜேந்திரன், கணேசன், அமுதபாரதி ஆகியோா் தலைமைச் செயற்குழு உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

கோவை வடக்கு மாவட்டச் செயலாளராக தொ.அ. ரவி, அவைத் தலைவராக புருஷோத்தமன், துணைச் செயலாளா்களாக அசோக் ஆறுக்குட்டி, செந்தில், ஜெயநிதி, பொருளாளராக அப்துல் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளனா். தலைமைச் செயற்குழு உறுப்பினா்களாக சண்முகசுந்தரம், சுப்பிரமணியன், அஷரப்அலி, சந்தோஷ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT