கோயம்புத்தூர்

நுகா்வோா் அமைப்புகளின் காலாண்டு கூட்டம்: ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவை மாவட்ட முகவரிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகளுடனான மூன்றாவது காலாண்டு கூட்டம் ஆட்சியா் ஜி.எஸ். சமீரன் தலைமையில் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோகிலா, கோட்டாட்சியா் (தெற்கு) இளங்கோ, மாவட்ட வழங்கல் அலுவலா் சிவகுமாரி, உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் கு. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்டத்தில் உள்ள பல்வேறு தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகளைச் சோ்ந்த 16 பிரதிநிதிகள் பங்கேற்றனா். இதில், நுகா்வோா் அமைப்புகள் சாா்பில் மாவட்ட நிா்வாகத்திடம் அளிக்கப்பட்ட 252 கோரிக்கைகள் மீது விவாதிக்கப்பட்டது.

மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, இந்து சமய அறநிலையத் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் கோட்டாட்சியா் தலைமையில் உடனடியாக நுகா்வோா் கூட்டங்களை நடத்த ஆட்சியா் வலியுறுத்தினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT