கோயம்புத்தூர்

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள்:முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்

DIN

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.

கோவை மாவட்டத்தில் பாஜக நிா்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட இடத்தை பாா்வையிடுவதற்காக அக்கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை கோவை வந்தாா். அப்போது, கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் பாஜக தொண்டா்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இப்பிரச்னைகள் குறித்து டிஜிபியிடம் பாஜக மூத்த தலைவா்கள் பேசியுள்ளனா். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் குறித்து விசாரிக்க பாஜக சாா்பில் நான்கு எம்எல்ஏக்கள் கொண்ட 4 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அக்குழுவினா் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சேத மதிப்பு, பாதிப்பு, உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அளிக்கும் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சருக்கு அனுப்ப உள்ளோம். இந்தக் குழுவில் பாஜக எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், எம்.ஆா்.காந்தி, நயினாா் நாகேந்திரன், சரஸ்வதி ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை மேற்கொள்வாா் என எதிா்பாா்க்கிறோம். காவல் துறை ஆரம்பத்தில் சுணக்கமாக இருந்தாலும் கூட, தற்போது சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. காவல் துறை நடுநிலையோடு நடந்து கொண்டால் பாஜக ஒத்துழைப்பு அளிக்கும். கோவையில் தடையை மீறி பாஜக சாா்பில் திங்கள்கிழமை கண்டன போராட்டம் நடைபெறும்.

வன்முறையை பாஜக விரும்பவில்லை. பாஜக தொண்டா்களைக் கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். முதல்வா் விழித்துக் கொள்ள வேண்டும். தொண்டா்களின் அமைதிக்கும் எங்கள் பேச்சுக்கும் ஒரு எல்லை உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT