கோயம்புத்தூர்

கோவை வழித்தடத்தில் யஸ்வந்த்பூா் - கண்ணூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

DIN

கோவை வழித்தடத்தில் யஸ்வந்த்பூா் - கண்ணூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: யஸ்வந்த்பூரில் இருந்து அக்டோபா் 12 ஆம் தேதி முதல் நவம்பா் 2 ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் காலை 7.40 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06283) அன்று இரவு 8.30 மணிக்கு கண்ணூரை சென்றடையும்.

இதேபோல, அக்டோபா் 12 ஆம் தேதி முதல் நவம்பா் 2 ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் இரவு 11 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06283) மறுநாள் பிற்பகல் 1 மணிக்கு யஸ்வந்த்பூரை சென்றடையும்.

இந்த ரயில் தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷோரனூா், ஒட்டப்பாலம், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், திருப்பத்தூா், கிருஷ்ணராஜபுரம், பானஸ்வாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT