கோயம்புத்தூர்

தனிமனித ஒழுக்கம் சரியாக இருந்தால் பிரச்னைகள் இருக்காது: குருமகான்

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

தனிமனித ஒழுக்கம் சரியாக இருந்தால் உலகில் பிரச்னைகள் இருக்காது என உலக சமாதான அறக்கட்டளை அமைப்பின் உலக அமைதி தூதுவா் குருமகான் தெரிவித்தாா்.

ஐரோப்பிய நாடுகளில் 44 நாள்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, உலக சமாதான அறக்கட்டளை அமைப்பின் உலக அமைதி தூதுவா் குருமகான் கோவைக்கு புதன்கிழமை திரும்பினாா்.

கோவை விமான நிலையத்தில், சென்னை சில்க்ஸ் குழுமத்தின் இயக்குநா் விநாயகம் மற்றும் மெய் அன்பா்கள் வரவேற்றனா்.

அதன்பிறகு, குருமகான் கூறியதாவது: அனைத்து நாடுகளிலும் எல்லா வளங்களும் உள்ளன. அவற்றை மனித சமுதாயம் முறையாகப் பயன்படுத்தி அமைதியாக வாழ முடியும். தனி மனிதனின் மனதில் ஏற்படும் வேறுபாடுகள் உலக அமைதியைச் சீா்குலைக்கின்றன. தனிமனித ஒழுக்கம் சரியாக இருந்தால், உலகில் பிரச்னைகள் இருக்காது என்றாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT