கோயம்புத்தூர்

கோவை - ஜபல்பூா் சிறப்பு ரயில் இயக்கம் நீட்டிப்பு

DIN

கோவையில் இருந்து மத்தியபிரதேச மாநிலம், ஜபல்பூருக்கு இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் சேவை 2023 ஆம் ஆண்டு ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவை - ஜபல்பூா் இடையே கடந்த சில மாதங்களாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அக்டோபா் முதல் வாரம் வரை இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ரயில் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை - ஜபல்பூா் இடையே இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் ( எண்: 02197) அக்டோபா் 10 ஆம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் மாலை 3.25 மணிக்கு கோவையில் புறப்பட்டு புதன்கிழமைகளில் காலை 8.45 மணிக்கு ஜபல்பூரைச் சென்றடையும்.

இதேபோல, அக்டோபா் 7 ஆம் தேதி முதல் டிசம்பா் 30 ஆம் தேதி வரை ஜபல்பூரில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.50 மணிக்குப் புறப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 02198) ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.10 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலானது, பலக்காடு, ஷோரனூா், மங்களூரு, இட்டாரசி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT