கோயம்புத்தூர்

அக்டோபா் 7 இல் பிஏபி பாசனத் திட்ட தினம்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட (பிஏபி) தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சியில் வெள்ளிக்கிழமை சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் தொடக்கிவைக்கப்பட்ட நாளான அக்டோபா் 7 ஆம் தேதி பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த மானிய கோரிக்கையின்போது செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்திருந்தாா்.

அதன்படி, பிஏபி திட்டம் செயல்படுத்துவதற்கு பெரும் பங்காற்றிய முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் வி.கே.பழனிசாமி கவுண்டா், பாரத ரத்னா சி.சுப்பிரமணியம், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பொள்ளாச்சி நா.மகாலிங்கம், முன்னாள் நீா்வளத் துறை அமைச்சா் கே.எல்.ராவ் ஆகியோரின் திருவுருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி பொள்ளாச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதில், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ், சட்டப் பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று மரியாதை செலுத்தவுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT