கோயம்புத்தூர்

வித்யாரம்பம்: கோவையில் ஏராளமானகுழந்தைகள் பங்கேற்பு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவையில் புதன்கிழமை நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்றனா்.

விஜயதசமி நாளில் பள்ளி வயது குழந்தைகளுக்கு எழுத்தாணிப்பால் எனப்படும் எழுத்தறிவிக்கும் (வித்யாரம்பம்) நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த நாளில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கும் குழந்தைகளின் நாவில் ஸ்ரீ ஹரி மந்திரத்தையும், உயிரெழுத்தையும் எழுதி, கல்விக் கடவுளை வணங்கி, குழந்தைகளின் கல்வி தொடங்கி வைக்கப்படும்.

அதன்படி, கோவை சித்தாபுதூரில் உள்ள அய்யப்பன் கோயிலில் எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்தனா். மேலும் விஜயதசமியையொட்டி அய்யப்பன் கோயில், மாநகரின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கத்திபோடும் நிகழ்வு: கோவை ராஜவீதி ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி கத்திபோடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

ADVERTISEMENT

அதன்படி, பூ மாா்க்கெட் மாகாளியம்மன் கோயிலில் தொடங்கிய கத்திபோடும் ஊா்வலம், சௌடாம்பிகை அம்மன் கோயில் வரை நடைபெற்றது. இதில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தேவாங்கா்

இன பக்தா்கள் கத்தியால் கைகளில் வெட்டிக் கொண்டு நோ்த்திக் கடன் செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT