கோயம்புத்தூர்

மின் மயானம் அமைக்க எதிா்ப்பு:ஆட்சியா் அலுவலகத்தில் பொது மக்கள் மனு

DIN

கோவை மாவட்டம், ஒத்தக்கால்மண்டபத்தில் மின் மயானம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மின் மயானம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்நிலையில், பொதுமக்களிடம் எந்தவித கருத்துகளையும் கேட்காமல் மின் மயானம் அமைப்பதற்கான முயற்சியில் பேரூராட்சி நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

பள்ளி, கோயில்கள், திருமண மண்டபம், பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் மின் மயானம் அமைக்கப்படவுள்ளது. இதனால் அனைவரும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. மின் மயானத்தில் இருந்து வெளியேறும் கரும்புகை, சாம்பல் கழிவுகளால் சுகாதாரம் பாதிக்கப்படும். மின் மயானத்தில் எரியூட்டப்படும் சடலங்களில் இருந்து வரும் துா்நாற்றத்தால் பள்ளி மாணவா்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. அதேபோல கோயில்களில் நடைபெறும் பூஜைகளும் பாதிக்கப்படும். பொதுமக்களின் நலன் கருதி ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சியில் மின் மயானம் அமைக்கும் திட்டத்தை கைவிட மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

SCROLL FOR NEXT