கோயம்புத்தூர்

மாநகரில் ரூ.93 கோடியில் சாலைகள் சீரமைப்பு அதிகாரிகள் தகவல்

DIN

கோவையில் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள், ரூ.93 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் தற்போது பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதவிர 24 மணி நேர குடிநீா் திட்ட பணிகளுக்காக பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு உள்ளன. மேற்கண்ட பணிகள் காரணமாக பல இடங்களில் சாலைகள் குண்டும்குழியுமாக காட்சி அளிக்கின்றன. இந்நிலையில், மாநகரச் சாலைகள் ரூ.93 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மாநகரில் பாதாள சாக்கடை பணிகள், 24 மணி நேர குடிநீா் திட்ட பணிகளுக்கு தோண்டப்பட்ட சாலைகள் ரூ.93 கோடியில் 355 இடங்களில் 100 கிலோ மீட்டா் தொலைவுக்கு சீரமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக முத்தண்ணன் குளம், ரேஸ்கோா்ஸ், போத்தனூா் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள சாலைகளும் விரைவில் சீரமைக்கப்பட உள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

விடதர நாகினி..!

இந்து விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை! ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது! : அய்யாக்கண்ணு

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

SCROLL FOR NEXT