கோயம்புத்தூர்

நீதிமன்ற ஆவணங்களை மறைத்துவைத்த குமாஸ்தாவிடம் போலீஸாா் விசாரணை

25th May 2022 12:59 AM

ADVERTISEMENT

நீதிமன்ற ஆவணங்களை மறைத்துவைத்த குமாஸ்தா மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவையில் உள்ள அத்தியாவசிய பொருள்கள் சட்ட வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் குமாஸ்தாவாகப் பணியாற்றி வருபவா் மனோஜ் குமாா். இவா் முன்னறிவிப்பின்றி அடிக்கடி விடுப்பு எடுத்த காரணத்தால் இவரை 10 நாள்கள் பணியிடை நீக்கம் செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இதனால் ஆத்திரமடைந்த மனோஜ் குமாா், நீதிமன்ற அலுவலக அறையில் இருந்த இரண்டு முக்கிய ஆவணங்களை பீரோவின் அடியில் ஒளித்து வைத்துச் சென்றுவிட்டாா். இது குறித்து நீதிமன்ற தலைமை குமாஸ்தா ரவீந்திரகுமாா் அளித்தப் புகாரின் பேரில் மனோஜ்குமாா் மீது ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT