கோயம்புத்தூர்

பருவ மழைக்கு முன் மாநகரில் சாலைப் பணிகளை முடிக்க திட்டம்

25th May 2022 12:58 AM

ADVERTISEMENT

தென்மேற்குப் பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக மாநகரில் புதிய சாலைகள் அமைத்தல், சாலை சீரமைப்புப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சியில், சிங்காநல்லூா், உக்கடம், குனியமுத்தூா், விளாங்குறிச்சி, தண்ணீா் பந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த சாலைகளால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். இந்நிலையில், தமிழக அரசு, கோவையில் புதிய சாலைகள் அமைக்க சாலைகளை மேம்படுத்த ரூ.200 கோடி நிதி சில மாதங்கள் முன் ஒதுக்கியது. மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்திலும் சாலை வசதியை மேம்படுத்தும் திட்டங்கள் அதிக அளவில் அறிவிக்கப்பட்டன. அதன்படி, கோவை மாநகரப் பகுதிகளில் புதிய சாலை அமைத்தல், சாலை சீரமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடா்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில்,‘ மாநகரில் புதிய சாலைகள் அமைப்பது, சேதமான சாலைகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் ஒரு மாதத்துக்கு மேலாக நடைபெற்று வருகின்றன. ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்குப் பருவ மழையின் தாக்கம் அதிகமாக வாய்ப்புள்ளதால், அதற்குள் மாநகரில் சாலை பணிகளை முடிக்க திட்டமிட்டு, பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன’ என்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT