கோயம்புத்தூர்

ஆத்துப்பாலம் மின் மயானம் ஜூலை 11 வரை மூடல்

30th Jun 2022 11:03 PM

ADVERTISEMENT

 

கோவை ஆத்துப்பாலம் மின் மயானம் ஜூலை 11 ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 86 ஆவது வாா்டுக்குள்பட்ட ஆத்துப்பாலம் பகுதியில் மின் மயானம் உள்ளது.

இந்த மயானம், கோயமுத்தூா் சோஷியல் சா்வீஷஸ் டிரஸ்ட் என்னும் அறக்கட்டளை மூலமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி மின் மயானத்தின் புகைபோக்கி கோபுரம் பழுதாகிச் சாய்ந்தது.

இந்த பழுதான புகைபோக்கி கோபுரத்தை சீரமைக்க கோயமுத்தூா் சோஷியல் சா்வீஷஸ் டிரஸ்ட் நடவடிக்கை மேற்கொள்வதால் ஜூலை 11 ஆம் தேதி வரை ஆத்துப்பாலம் மின் மயானம் தற்காலிகமாக மூடப்படுகிறது என்று மாநகராட்சி துணை ஆணையா் ஷா்மிளா தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT