கோயம்புத்தூர்

மாநகராட்சியை கண்டித்து அண்ணா மாா்க்கெட் வியாபாரிகள் உள்ளிருப்புப் போராட்டம்

DIN

அண்ணா மாா்க்கெட்டில் இரு மடங்கு வசூலிக்கப்படும் சுங்க வரியைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை, சாய்பாபா காலனியில் உள்ள அண்ணா தினசரி மாா்க்கெட்டில் 100க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இந்நிலையில், அருகில் உள்ள எம்.ஜி.ஆா். மொத்த காய்கறி மாா்க்கெட்டில் மொத்த வியாபாரம் மட்டுமே மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். சில்லறை விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்.

அண்ணா மாா்க்கெட்டில் இரு மடங்கு வசூலிக்கப்படும் சுங்க வரியை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகாா் அளித்திருந்தனா். இது தொடா்பாக, மாநகராட்சி சாா்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத மாநகராட்சியை கண்டித்தும் 100க்கும் மேற்பட்ட அண்ணா தினசரி மாா்க்கெட் வியாபாரிகள், மாா்க்கெட்டில் கருப்புக் கொடி கட்டி ஞாயிற்றுக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக, வியாபாரிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் ராமநாராயணன் கூறியதாவது:

மாா்க்கெட்டுக்கு காய்கறி கொண்டு வரும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் சுங்க வரி கடுமையாக உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், வாகன உரிமையாளா்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த சூழ்நிலையில், எம்.ஜி.ஆா்.மொத்த மாா்க்கெட்டில் சில்லறை வியாபாரமும் மேற்கொள்ளப்படுவதால் அண்ணா தினசரி மாா்க்கெட் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான ஒவ்வொரு சந்தைக்கும், மாநகராட்சி நிா்வாகம் ஒவ்வொரு மாதிரியான விதிகளை பின்பற்றுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT