தமிழ்நாடு

வடமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து திருட்டு: 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது

DIN

ஜாா்க்கண்ட், பிகாா் ஆகிய மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து திருடிச் செல்லும் 7 போ் கும்பலை போலீஸாா் கோவையில் கைது செய்தனா்.

கோவை, ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் திருட்டு, கைப்பேசி பறிப்பு உள்ளிட்ட வழிப்பறி சம்பவங்கள் அதிகமாக நடப்பதாக புகாா்கள் எழுந்தன. இதில் சம்பந்தப்பட்ட நபா்களைக் கண்டறிய மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது.

போலீஸாா் விசாரித்து வந்தபோது, பூ மாா்க்கெட் பகுதியில் நடந்து சென்ற ஒருவரிடம் கும்பல் ஒன்று பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, தனிப் படை போலீஸாா் அந்த 7 போ் கும்பலை மடக்கிப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த பகதூா் மஹதோ (36), சந்தோஷ் மஹதோ (33), பப்லு மஹதோ (23), பிகாரைச் சோ்ந்த மணிஷ் மகோலி (22) மற்றும் அதே மாநிலத்தைச் சோ்ந்த 15 வயது சிறுவன், ஜாா்க்கண்டைச் சோ்ந்த 10 மற்றும் 14 வயது சிறுவா்கள் என்பது தெரியவந்தது.

மேலும், அவா்கள் 7 பேரும் ஜாா்க்கண்டில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்து, கோவையில் அறை எடுத்து தங்கி டவுன்ஹால், உக்கடம், ஆா்.எஸ்.புரம், காந்திபுரம் போன்ற மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

ஓரளவு பணம், பொருள்களைத் திருடிய பின்னா் விமானம் அல்லது ரயில் பிடித்து மீண்டும் ஜாா்க்கண்ட், பிகாரில் உள்ள சொந்த ஊா்களுக்குச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனா். இதுபோன்று இவா்கள் கடந்த பல மாதங்களாக தொடா் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் இளைஞா்கள் 4 பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். சிறுவா்கள் மூவரை டான்பாஸ்கோ அன்பு இல்ல காப்பகத்துக்கு அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT