கோயம்புத்தூர்

ஜூலை 11 முதல் கோவை - பாலக்காடு மெமு ரயில் சேவை

6th Jul 2022 10:54 PM

ADVERTISEMENT

 

கோவை - பாலக்காடு வழித்தடத்தில் ஜூலை 11 முதல் மெமு ரயில் இயக்கப்பட உள்ளதாக பாலக்காடு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதில், ஈரோடு - பாலக்காடு, கோவை - பாலக்காடு மெமு ரயில்களின் சேவையும் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்ததால், 2021ஆம் ஆண்டு முதல் மீண்டும் ரயில்சேவை துவங்கப்பட்டது. இருப்பினும், பல வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தன.

அதில், ஈரோடு - பாலக்காடு, கோவை - பாலக்காடு மெமு ரயில் சேவையும் அடங்கும். இந்நிலையில், கல்லூரி செல்வோா், பணிக்குச் செல்வோா் இந்த ரயில்களை இயக்கிட தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த வாரம் முதல் பாலக்காடு - ஈரோடு இடையே மெமு ரயில் சேவை துவங்கப்பட்டது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, கோவை-பாலக்காடு இடையே ஜூலை 11ஆம் தேதி முதல் மெமு ரயில் சேவை துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஜூலை 11ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தவிர பாலக்காடு டவுன் நிலையத்தில் காலை 7.20 மணிக்குப் புறப்படும் மெமு ரயில் (எண்: 06806) காலை 9 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும். கோவை ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்குப் புறப்படும் மெமு ரயில் (எண்: 06807) இரவு 7.55 மணிக்கு பாலக்காடு டவுன் நிலையத்தை சென்றடையும். இந்த ரயிலானது போத்தனூா், மதுக்கரை, எட்டிமடை, வாளையாறு, கஞ்சிக்கோடு, பாலக்காடு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT