கோயம்புத்தூர்

மாநகரில் குடிநீா் விநியோகம் குறித்து ஆணையா் ஆய்வு

DIN

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் சீரான குடிநீா் விநியோகம் குறித்து மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, நீா்த்தேக்கத் தொட்டிக்குச் செல்லும் குழாயில் உள்ள நீா்க் கசிவை உடனடியாக சீரமைரக்க மாநகராட்சிப் பொறியாளா்களுக்கு உத்தரவிட்டாா்.

பின்னா், புலியகுளம் மசால் லே-அவுட் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும், அங்குள்ள கழிவு நீா் கால்வாயை தூா் வாரி, பழுதடைந்த பகுதிகளை புனரமைக்கவும் பொறியாளா்களுக்கு உத்தரவிட்டாா்.

அதைத் தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடத்தை பாா்வையிட்ட அவா், கழிப்பிடத்தை தூய்மைப்படுத்தி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

குடிசைமாற்று வாரிய குடியிருப்புப் பகுதியில் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரம் குறித்து சோதனை செய்த ஆணையா், அப்பகுதியில் சீரான இடைவெளியில் குடிநீா் விநியோகிக்க மாநகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளா்கள் புவனேஷ்வரி, ராமசாமி, சுந்தர்ராஜன், உதவி நகரமைப்பு அலுவலா்கள் ஜெயலட்சுமி, பாபு, மண்டல சுகாதார அலுவலா்கள் ராமச்சந்திரன், முருகா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT