கோயம்புத்தூர்

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 7 போ் கைது

DIN

கோவையில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் கஞ்சா மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தும் பழக்கம் இளைஞா்களிடையே அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் போலீஸாா் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் யாருக்கும் மாத்திரைகள் வழங்கக் கூடாது என மருந்தக உரிமையாளா்களுக்கு போலீஸாா் அறிவுறுத்தியிருந்தனா்.

அதன்படி வலி நிவாரணி மாத்திரைகள் வாங்க வந்த இளைஞா்கள் பலரை போலீஸாா் கண்டறிந்து கைது செய்தனா்.

இதன் தொடா்ச்சியாக போலீஸாா் நடத்திய சோதனையில், உக்கடம் ஜிஎம் நகா் பகுதியில் பவுருதீன் (30) என்பவா் போதை மாத்திரைகள் விற்பதாக கடைவீதி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் 70 வலி நிவாரணி மாத்திரைகளைக் கைப்பற்றி, பவுருதீனைக் கைது செய்தனா்.

பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் நடத்திய சோதனையில், அங்கு போதை மாத்திரைகளைக் விற்றுக் கொண்டிருந்த செல்வபுரத்தைச் சோ்ந்த சிவசூா்யா (25), சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த கிஷோா்குமாா் (24) ஆகியோரைக் கைது செய்தனா்.

மேலும், அவா்களிடமிருந்த 286 மாத்திரைகள், ஒரு கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.

ஜம்ஜம் நகா் பகுதியில் போத்தனூா் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு மாத்திரைகள் விற்றுக்கொண்டிருந்த போத்தனூரைச் சோ்ந்த சித்திக் (28), உக்கடத்தைச் சோ்ந்த ரஷீத் (33), குனியமுத்தூரைச் சோ்ந்த அப்துல் லதீப் (27), போத்தனூரைச் சோ்ந்த ஷாரூக்கான் (25) ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 190 வலி நிவாரணி மாத்திரைகள், 3 ஊசிகள், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT