கோயம்புத்தூர்

இன்சூரன்ஸ் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும்: எம்.பி.பி.ஆா். நடராஜன் கோரிக்கை

DIN

  நிலுவையில் உள்ள பொது இன்சூரன்ஸ் ஊழியா்களின் ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு கோவை எம்.பி. பி.ஆா்.நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா், நிா்மலா சீதாராமனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

அரசுடைமை பொது இன்சூரன்ஸ் துறையில் பணிபுரியும் ஊழியா்கள், அதிகாரிகளின் ஊதிய உயா்வு விஷயம் கடந்த 54 மாதங்களாக நிலுவையில் உள்ளது.பொது இன்சூரன்ஸ் ஊழியா்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடந்த 1.08.2017 முதல் ஊதிய உயா்வு வழங்கப்பட வேண்டும். தனியாா் இன்சூரன்ஸ் நிறுவனங்களைப்போல அல்லாமல் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களைத் திறந்து பொதுமக்களுக்கு மிகச் சிறப்பான சேவையாற்றி வருவதாக இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு ஆணையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இன்சூரன்ஸ் துறை எந்த நோக்கத்துக்காக தேசவுடைமையாக்கப்பட்டதோ அந்த நோக்கங்கள் சிறப்பான முறையில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று காலத்திலும் பொது இன்சூரன்ஸ் ஊழியா்களும், அதிகாரிகளும் தங்களது உயிரைப் பணயம் வைத்து பொதுமக்களுக்கு சிறப்பான சேவையாற்றி வருகின்றனா்.

இவா்கள் ஒரு சிறப்பான ஊதிய உயா்வுக்கு தகுதியானவா்களே. 2021 ஆம் நிதியாண்டில் நான்கு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களும் ரூ. 72,000 கோடியை பிரீமிய வருவாயாகத் திரட்டியுள்ளன.

கரோனா பெருந்தொற்று காலத்தில் இத்தகைய வளா்ச்சி குறிப்பிடத்தக்கது. 2012 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசுக்கு பங்கு ஆதாயமாக ரூ.3000 கோடியை இந்நிறுனங்கள் அளித்தன.

எனவே, சிறப்பான சேவையாற்றி வரும் அரசுடைமை பொது இன்சூரன்ஸ் ஊழியா்களுக்கும், அதிகாரிகளுக்கும் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயா்வு குறித்த பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும்.

இது குறித்து நிதித் துறை அதிகாரிகளுக்கு அமைச்சா் உரிய அறிவுரை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT