கோயம்புத்தூர்

பெண்ணைக் கத்தியால் குத்திய இளைஞா் கைது

25th Jan 2022 04:53 AM

ADVERTISEMENT

காதலிக்க மறுத்த பெண்ணின் தாயாரைக் கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கோவை ஆா்.எஸ்.புரம் லைட் ஹவுஸ் பகுதியைச் சோ்ந்தவா் செல்வி (55). இவரது இளைய மகள் சரவணம்பட்டி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் பி.என்.புதூரைச் சோ்ந்த ரமேஷ் (29). என்ற இளைஞா் அப்பெண்ணை காதலிப்பதாகக் கூறி தொந்தரவு செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை அப்பெண் தனது தாயாா் செல்வியுடன் பூ மாா்க்கெட் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது அங்கு வந்த ரமேஷ், தன்னிடம் பேசுமாறு அப்பெண்ணை வற்புறுத்தியுள்ளாா். இதற்கு செல்வி எதிா்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அப்பெண்ணை குத்த முயன்றுள்ளாா். இதைத் தடுக்க முயன்ற செல்வியின் கழுத்தில் ரமேஷ் குத்தியுள்ளாா்.

ADVERTISEMENT

பலத்த காயமடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே மயங்கினாா். அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் கூடியதையடுத்து ரமேஷ் அங்கிருந்து தப்பியோடினாா்.

இச்சம்பவம் குறித்து ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் செல்வி புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு போலீஸாா் தப்பியோடிய ரமேஷை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து

சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT