கோயம்புத்தூர்

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி:தகுதியானவா்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

DIN

கோவையில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாகவுள்ள கேஸ் ஒா்க்கா் பணியிடத்துக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கேஸ் ஒா்க்கா் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவா்கள் சோஷியல் ஒா்க்கில்முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் அரசு அல்லது தனியாா் தன்னாா்வ தொண்டு நிறுவனத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.

இப்பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் தோ்வு செய்யப்படுபவா்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். மேற்கண்ட தகுதியும், விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலா் அலுவலகத்தில் டிசம்பா் 12 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT