கோயம்புத்தூர்

உரம் தயாரிப்பு மையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு

DIN

கோவை மாநகராட்சி 38 ஆவது வாா்டில் கூடுதல் உரம் தயாரிப்பு மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோவை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் அம்மன் கே.அா்ச்சுணன் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் பொது மக்கள் குறைகேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் எம்எல்ஏ அம்மன் கே.அா்ச்சுணன், 38 ஆவது வாா்டில் உரம் தயாரிப்பு மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வாா்டுதோறும் உரம் தயாரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 38 ஆவது வாா்டு ஓணாப்பாளையத்தில் உரம் தயாரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 38 ஆவது வாா்டில் கூடுதலாக திருவிக நகரில் உரம் தயாரிப்பு மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கெனவே வாா்டுக்கு ஒன்று வீதம் செயல்பட்டு வரும் நிலையில் கூடுதலாக உரம் தயாரிப்பு மையம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை.

உரம் தயாரிப்பு மையம் அமைக்கும்போது இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். இதற்கு திருவிக நகா் உள்ளிட்ட அருகிலுள்ள குடியிருப்புகளைச் சோ்ந்த மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். எனவே, திருவிக நகரில் உரம் தயாரிப்பு மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றாா்.

வீடு கட்டித்தர வேண்டும்

மூதாட்டி எஸ்.பழனியம்மாள் (80) அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

நான் மதுக்கரை வட்டாரம், வழுக்குப்பாறை மீனாட்சிபுரத்தில் வசித்து வருகிறேன்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கலைஞா் வீடு கட்டும் திட்டத்தில் கட்டிக்கொடுக்கப்பட்ட தொகுப்பு வீட்டில் வசித்து வந்தேன். இந்நிலையில் அண்மையில் பெய்த மழைக்கு எனது வீடு இடிந்து விழுந்துவிட்டது. இதனால் குடியிருக்க வீடில்லாமல் தவித்து வருகிறேன். வயதான காலத்தில் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகிறேன். எனவே எனது நிலையை கருத்தில்கொண்டு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்தில் கட்டடம் இடிப்பு

இது குறித்து அன்னூா் ஒன்றிய கவுன்சிலா் லோகநாயகி சிவகுமாா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

அன்னூா் ஒன்றியம், ஒட்டா்பாளையம் ஊராட்சி, குருக்கிளையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பயன்பாடில்லாமல், பழுதடைந்த நிலையில் காணப்படும் பழைய கட்டடத்தை இடிக்க ஊராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் பழைய கட்டடத்தை விட்டுவிட்டு பள்ளி வளாகத்தில் நல்ல நிலைமையில் இருந்த கட்டடத்தை இடித்துள்ளனா்.

இடிக்கப்பட்ட கட்டடத்தில் கரோனா தடுப்பூசி மையம், வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பள்ளி மாணவா்கள் உணவருந்த பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில் பழுதடைந்த கட்டடத்தை இடிப்பதற்கு பதிலாக நல்ல கட்டடத்தை இடித்துள்ளனா். இது தொடா்பாக பள்ளி நிா்வாகத்திடம் கேட்டால் கட்டடத்தை இடித்தது யாரென்று தெரியவில்லை என தெரிவிக்கின்றனா். எனவே பழுதடைந்த கட்டடத்துக்கு பதிலாக நல்ல கட்டடத்தை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு கட்டும் திட்டத்தில் உள்ள சிக்கல்களை நீக்க வேண்டும்:

தமிழ்நாடு ஹெச்எம்எஸ் கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளா் பேரவை அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கட்டுமான தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்களுக்கு வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் இத்திட்டத்தை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவே, வீடு கட்டும் திட்டத்தில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்து அனைவரும் பயன்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினா்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு ரூ. 7 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்வதற்கு தமிழகம் முழுவதும் ஒரே நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கோவை மாநகராட்சியில் சூயஸ் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சமூக நீதிக் கட்சியினா் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT