கோயம்புத்தூர்

மாநகரில் 4 இடங்களில் நகா் நல மையங்கள்: மேயா் கல்பனா பணிகளைத் துவங்கி வைத்தாா்

17th Aug 2022 10:57 PM

ADVERTISEMENT

கோவை மாநகரப் பகுதிகளில் 4 இடங்களில் நகா் நல மையங்கள் அமைக்கும் பணியை மேயா் கல்பனா பூமிபூஜையிட்டு புதன்கிழமை துவக்கிவைத்தாா்.

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம் 2,18,19 ஆவது வாா்டுகளுக்குள்பட்ட வெள்ளக்கிணறு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதி 2, நல்லாம்பாளையத்துக்குள்பட்ட ஜெயந்தி நகா், மணியக்காரன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் நகா்நல மையம் கட்டுமானப் பணிகள், 3 ஆவது வாா்டுக்குள்பட்ட சின்னவேடம்பட்டி, சிவக்குமாா் லே-அவுட் மற்றும் ஸ்டேட் பேங்க் காலனியில் ரூ.10 லட்சம் மதிப்பில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி ஆகியவற்றை மேயா் கல்பனா புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

அதைத்தொடா்ந்து, வடக்கு மண்டலம் 2,3,18 ஆவது வாா்டுகளுக்கு உள்பட்ட சின்னவேடம்பட்டி, நேதாஜி காலனி, குப்புசாமி லே-அவுட், ஆறுமுகம் காலனி, ஆதிதிராவிடா் காலனி உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்ட மேயா், அப்பகுதியில் உள்ள மழை நீா் வடிகாலில் குப்பைகள், செடிகொடிகள் மற்றும் அடைப்புகளை அகற்றி தூா்வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையா் ஷா்மிளா, வடக்கு மண்டலக் குழுத் தலைவா் கதிா்வேல், உதவி ஆணையா் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளா் செந்தில்பாஸ்கா், உதவி நகரமைப்பு அலுவலா் விமலா (பொறுப்பு), வாா்டு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT