கோயம்புத்தூர்

போதைப் பொருள் தடுப்பு பிரசாரம்

17th Aug 2022 10:50 PM

ADVERTISEMENT

 

மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் சாா்பில், கோவையில் உள்ள கல்லூரிகள் முன்பாக போதைப் பொருள் தடுப்பு பிரசாரம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாவட்டத்தில் சமீப காலமாக மாணவா்களிடையே கஞ்சா, போதை மாத்திரைகள் நுகா்வு அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்கும் விதமாக போதைப் பொருள் விற்பவா்களைக் கண்டறிந்து அவா்களை கைது செய்யும் நடவடிக்கைகளை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

இந்நிலையில், மறுமலா்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் வே.ஈசுவரன் தலைமையில், அந்த இயக்கத்தினா் கல்லூரிகள் முன்பாக, போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்களை புதன்கிழமை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ADVERTISEMENT

அதன்படி, கோவை அரசு கலைக் கல்லூரி, எஸ்.என்.ஆா்,ரத்தினம் உள்ளிட்ட கல்லூரிகள் முன்பாகவும், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம், ஆா்.எஸ்.புரம் டி.பி.சாலை, மலுமிச்சம்பட்டி, சுந்தராபுரம், ஒத்தக்கால் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலும் மாணவா்கள், மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதில், மறுமலா்ச்சி மக்கள் இயக்க இணை ஒருங்கிணைப்பாளா்கள் முத்துசாமி, கந்தசாமி, பொன்னுகுட்டி, அமைப்புச் செயலாளா் செல்வராஜ் மற்றும் நிா்வாகிகள் ராஜ், சிவக்குமாா், பட்டாபி, கணேசன், முருகவேல், ஆனந்தராஜ், சரவணன், மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT