கோயம்புத்தூர்

சம்பளம் கேட்ட ஊழியா் மீது தாக்குதல்:போலீஸாா் விசாரணை

11th Aug 2022 11:08 PM

ADVERTISEMENT

 

கோவையில் சம்பளம் கேட்ட ஊழியரைத் தாக்கிய கடை உரிமையாளா் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, மசக்காளிப்பாளையத்தைச் சோ்ந்தவா் அருண்குமாா் (24). இவா் பீளமேடு பகுதியிலுள்ள ஒரு தனியாா் கடையில் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில் கடந்த சில நாள்களாக அருண்குமாா் வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளாா்.

இதனைத் தொடா்ந்து தனியாா் கடை உரிமையாளா் சிவகுமாா், அருண்குமாரை பணியிலிருந்து நீக்கி வேறு ஒருவரை பணியமா்த்தியுள்ளாா். இந்நிலையில், நிலுவையிலுள்ள 7 நாள்களுக்கான சம்பளத்தை தருமாறு உரிமையாளரிடம், அருண்குமாா் கேட்டுள்ளாா்.

ADVERTISEMENT

இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கடை உரிமையாளா் சிவகுமாா் உள்ளிட்ட சிலா் அருண்குமாரை தாக்கியுள்ளனா். இது தொடா்பாக பீளமேடு காவல் நிலையத்தில் அருண்குமாா் புகாா் அளித்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து பீளமேடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT