கோயம்புத்தூர்

தினமணி சாா்பில் இல்லம்தோறும் தேசியக் கொடி விழிப்புணா்வு

DIN

இல்லம்தோறும் தேசியக் கொடி திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும்விதமாக, கோவையில் தினமணி - தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு தேசியக் கொடி வழங்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கியது.

ஈரோடு வேளாளா் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி, எஸ்.கே.எம். ஹொ்போதயா, கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை, ஜெம் மருத்துவமனை, கே.பி.ஆா். தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை இணைந்து இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்துகின்றன.

இதன்படி கோவை, திருப்பூா், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் சுமாா் 20 அரசு, தனியாா் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேசியக் கொடி வழங்கப்பட உள்ளது. இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியின் தொடக்க விழா கோவை பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மணி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் கே.சத்தியநாராயணனிடம் தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன. இதையடுத்து வெள்ளிக்கிழமை வரை 4 மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேசியக் கொடிகள் வழங்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

குமுதா மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT