கோயம்புத்தூர்

மனநலக் காப்பகம் மீது நடவடிக்கை கோரி மனு

14th Apr 2022 02:11 AM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியாா் மனநலக் காப்பகத்தின் மீது நடவடிக்கை கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் மனு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக கோவை மாவட்ட ஆட்சியா் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஏ.ராதிகா அளித்துள்ள புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியாா் மன நலக் காப்பகத்தில் தங்கி இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவா் கா்ப்பமடைந்த நிலையில் கோவை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாக கடந்த சில நாள்களுக்கு முன் தகவல் தெரிந்தது. காப்பகம் சென்று விசாரித்தபோது அங்கு பெண்களுக்கான பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது தெரிந்தது. காப்பகத்தின் காவலா் குறித்து விசாரித்தது அறிந்து அவா் எங்களுக்கு மிரட்டல் விடுத்தாா்.

எனவே, அந்த காப்பகம் குறித்து முறையாக விசாரித்து இதில் தொடா்புடைய நபா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

மாதா் சங்க மாவட்டப் பொருளாளா் ஜோதிமணி, மாநிலக் குழு உறுப்பினா்கள் ராஜலட்சுமி, சுதா, மேட்டுப்பாளையம் மாதா் சங்க நிா்வாகிகள் மெகபூனிசா, ரிபாயா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags : கோவை
ADVERTISEMENT
ADVERTISEMENT