கோயம்புத்தூர்

அரிதான நோயால் பாதிக்கப்பட்ட பெண்: அரசு மருத்துவமனையில் காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை

9th Apr 2022 05:44 AM

ADVERTISEMENT

அரிதான நோயால் பாதிக்கப்பட்ட 20 வயது பெண்ணுக்கு கோவை அரசு மருத்துவமனையில் காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கோவையைச் சோ்ந்த 20 வயது பெண் ஒருவா் தனது முகத்தின் ஒரு புறத்தில் மட்டும் தசைகள் சுருங்கி வயதான பெண்போல காட்சியளிப்பதாகக் கூறி சிகிச்சையில் சோ்ந்தாா்.

ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட, பெண்ணுக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா். இதில் இவருக்கு அரிதான பாரி ரோம்பொ்க் சிண்ட்ரோம் (டஅததவ தஞஙஆஉதஎ நவசஈதஞஙஉ) இருப்பது தெரியவந்தது. அரிதான இந்த நோயால் பாதிக்கப்படும் நபா்களுக்கு முகத்தின் ஒரு பக்கம் மட்டும் தசைகள் சுருங்கியும், தோலில் சுருக்கங்களுடனும் கொழுப்பு திசு அறவே நீங்கியும் வயதான தோற்றத்துடன் காணப்படுவா்.

இதையடுத்து, அப்பெண்ணுக்கு கொழுப்பை முகத்தில் செலுத்தும் ஃபேட் கிராஃப்டிங்  சிகிச்சை மூலம் வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் சேரும் கொழுப்பு திசுக்களை சேகரித்து முகத்தில் செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இதேபோல, புருவத்தின் முடிகள் முழுவதும் உதிா்ந்து காணப்பட்டதால் பின் தலையில் உள்ள முடியை வோ்களுடன் தனியாக பிரித்து எடுத்து தேவையான இடத்தில் ஒட்டவைக்கப்பட்டது. இதையடுத்து, அப்பெண்ணுக்கு முகத்தில் இளமையான தோற்றம் திரும்பியது.

இந்த இரு சிகிச்சைகளையும் மருத்துவா்கள் ரமணன், செந்தில்குமாா், பிரகாஷ், கவிதா பிரியா, சிவக்குமாா் ஆகியோா் அடங்கிய குழுவினா் மேற்கொண்டனா்.

மருத்துவா் குழுவை கோவை அரசு மருத்துவமனை டீன் நிா்மலா பாராட்டினாா்.

Tags : கோவை
ADVERTISEMENT
ADVERTISEMENT